IPL 2025 இறுதிப்போட்டி : கோப்பையை வெல்லப்போவது யார்?

2

ஐபிஎல் (Indian Premier League) தொடரின் 18ஆவது தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings)அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத இரு அணிகள் இந்த இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்தவொரு மாற்றமும் செய்யாமல் வெற்றிபெற்ற லெவனுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன.

Exit mobile version