23 வயதுடைய யுவதி தன்னுடைய 14 வயதுடைய தங்கையை கொழும்பு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தன் காதலனுடன் சென்றுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி வெலிகம இப்பாவல பிரதேசத்தை சேர்ந்த குறித்த யுவதி மருந்து வாங்குவதற்காக வெலிகமவிற்கு செல்வதாக கூறி தாயிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்கையுடன் வீட்டை விட்டு வந்துள்ளார்.
பின்னர் கொழும்பு – மாத்தறை பேருந்தில் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.
குறித்த யுவதியின் காதலன் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவே யுவதி தன் தங்கையிடம் 1000 ரூபாய் பணத்தை கொடுத்து, வீடு செல்லுமாறு கூறிவிட்டு காதலனுடன் சென்றுள்ளார்.
கொழும்பு பேருந்து நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த சிறுமியை பொலிஸார் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment