சமையல் எரிவாயு விலை தொடர்பில் தகவல்

tamilni 44

சமையல் எரிவாயு விலை தொடர்பில் தகவல்

சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலையை தொடர்ந்தும் பேண முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி செயலகத்துடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 145 ரூபாவினால் உயர்த்தப்பட்டது.

ஏனைய எடைகளை கொண்ட சிலிண்டர் வகைகளின் விலையும் ஒப்பீட்டளவில் அதிகரிக்கப்பட்டது.

தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சமையல் எரிவாயுவின் விலையை சீராக பேணுவதற்கு முயற்சிக்கப்படுவதாக குறித்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Exit mobile version