மதுபானசாலைகள் பூட்டப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

10 3

நாட்டில் உள்ள மதுபானசாலைகளை நாளை (03) மூடுவதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.

உலக மது ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3 அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை மதுபானசாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்களைத் தடுக்கவும், வெற்றிகரமான சோதனைகளை நடத்தவும், ‘1913’ துரித இலக்கம் மூலமாகவோ, 011 2 877 688 என்ற தொலைநகல் எண்ணுக்கு தொலைநகல் மூலமாகவோ அல்லது oicoptroxin/aexcise,gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு மதுவரித் திணைக்களம், பொதுமக்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version