8 20
இலங்கைசெய்திகள்

யாழில் எம்.பியால் ஒப்படைக்கப்பட்ட பாரவூர்தி : சோதனைக்குட்படுத்திய காவல்துறையினர்

Share

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் (K.Ilankumaran) காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை ஏற்றிச்சென்ற பாரவூர்தி காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் வைத்து குறித்த பாரவூர்தி வழிமறிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் வைத்து நேற்று (09) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மேற்படி சுண்ணக்கல்லை ஏற்றி வந்த வாகனத்தில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான பொருட்களை மறைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் சாவகச்சேரி காவல்துறையினர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சுண்ணக்கற்களை வாகனத்தில் இருந்து அகற்றி சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

மேற்படி சோதனை நடவடிக்கையின் போது எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருட்களும் இல்லாத நிலையில் காவல்துறையினர் கனரக வாகனம் மற்றும் சுண்ணக்கற்களை சாவகச்சேரி நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...