21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

Share

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 3,200 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கோட்டை மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தேசிக்காயின் மொத்த விலை 1,900 ரூபாவில் இருந்து 2,000 ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், சந்தைகளில் சில்லறை விலை 2,800 ரூபா முதல் 3,200 ரூபா வரை பதிவாகியுள்ளது.

அதேசமயம் பிரபல பல்பொருள் அங்காடிகளில் தேசிக்காய் ஒரு கிலோ கிராமின் விலை 2,500 ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நேற்றையதினம் தேசிக்காயின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள விலைப் பட்டியலின் ஊடாக அறிய முடிகின்றது.

அத்துடன், ஒரு தேசிக்காயினுடைய விலை சந்தையில் 50 ரூபாவிற்கும் அதிகமாக காணப்படுவதாவும், சந்தைக்கு தேசிக்காயின் வரத்து குறைவடைந்து காணப்படுகின்றமைமே குறித்த விலை அதிகரிப்பிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...

17 7
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என...