25 68483933059b8
இலங்கைசெய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக LGBTQ நடைபவனி! கீதநாத் கண்டனம்

Share

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக LGBTQ நடைபவனி குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”குறித்த செயற்பாடு தமிழ் கலாசாரம் மற்றும் சமய நெறிகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தில் தனி நபர்களோ அமைப்புகளோ தமது உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியும். எனினும் அவர்கள் தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை, குறிப்பாக புனிதத் தலங்களுக்கான இடங்களில் மதிக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

யாழ். மக்களுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதுமான மற்றும் உலகளாவிய ரீதியிலான பக்தர்களின் புனிதத் தலமாக விளங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஓரினச் சேர்க்கை மற்றும் அதுசார்ந்த தமது நம்பிக்கைகளை ஒரு குழு விளம்பரப்படுத்தும் செயல் அதிர்ச்சிகரமானதும் வெட்கக்கேடானாதுமாகும்.

இந்த செயற்பாடானது முழுக்க முழுக்க தமிழ்க் கலாசாரத்துக்கு எதிரான ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்பதுடன் குறித்த செயற்பாடுகளை அரங்கேற்றும் குழுக்களுக்கு மேலைத்தேய கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை எமது சிறுவர்கள் மீது திணிக்க முற்படும் இரகசிய குழுக்களால் பணம் வழங்கப்படும் ஓர் இரகசிய நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறது.

அண்மையில் நல்லூர் புனிதப் பிரதேசத்தில் மாமிச உணவுகளை விற்பனை செய்யும் ஓர் உணவகம் ஒன்றிற்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல்கொடுத்ததன் காரணமாக குறித்த உணவகம் சைவ உணவினை பரிமாறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

எனினும் குறித்த உணவகத்திற்கு எதிராக குரல் எழுப்பிய அனைவரும் தமிழ் கலாசாரம் சீரழிக்கப்படும் இவ்விவகாரத்தில் மெளனம் காப்பது வருத்தமளிக்கிறது.

குறித்த மேலைத்தேய கலாசார நடவடிக்கைகள் எமது கலாசார மற்றும் புனிதப் பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் இக்குழுவினரும் ஒரு சமூகத்தின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை மதிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இது போன்ற கலாசார சீரழிவு நடக்கும் பொழுது நாம் மௌனித்து இருக்க நாம் எந்த ஒரு அமைப்பிடமும் விலை போகவில்லை. தமிழ் கட்சிகள் இதனை கண்டிக்க தவறினால் எமது அடுத்த தலைமுறை சீர்கெட்டு விடும்.

உண்மையான மற்றும் உணர்வுபூர்வமான மாற்றுப்பாலினத்தவர்கள் வானவில் சமூகத்துடைய செயற்பாடுகளுக்கு அப்பால் இருந்துவருவதே நிதர்சனமாகும் எனும் நிலையில், இ‌‌ந்த சீர்கேட்டை கண்டிக்கத் தவறிவிட்டு உணவகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது அர்த்தமற்ற ஒரு செயற்பாடாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...