விண்கல் மழையை பார்வையிட இலங்கையர்களுக்கும் வாய்ப்பு

tamilni 247

விண்கல் மழையை பார்வையிட இலங்கையர்களுக்கும் வாய்ப்பு

லியோனிட் விண்கல் மழையின் உச்சத்தை இலங்கையர்களும் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் நாளை (18.11.2023) மற்றும் நாளை மறுதினம் இதனை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியலாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த இரண்டு நாட்களிலும் அதிகாலை 2.00 மணிக்குப் பிறகு, கிழக்கு அடிவானத்தில் இந்த விண்கல் மழை தென்பட வாய்ப்புள்ளது.

ஒரு மணித்தியாலத்திற்கு 10-15 விண்கற்கள் வரை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version