எலுமிச்சைப்பழத்தின் விலை வீழ்ச்சி

rtjyf 2

எலுமிச்சைப்பழத்தின் விலை வீழ்ச்சி

கடந்த மாதம் சடுதியாக அதிகரித்து காணப்பட்ட எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

2500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது 400 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

கடந்த மாதம் சில கடைகளில் எலுமிச்சை பழம் ஒன்று நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தைகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version