உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

24 66440089b485f

உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இடைத்தரகர்களின் மோசடியான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் எலுமிச்சை 50 ரூபாய் முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்படுவதாகவும், தமது உற்பத்திகளுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என எலுமிச்சை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சந்தையில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 2,200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, பேலியகொடை சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபாவாக நேற்றைய தினம் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version