tamilni 65 scaled
இலங்கைசெய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு

Share

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் நடைமுறையில் இருந்த விலையிலேயே நவம்பர் மாதமும் எரிவாயுவை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புடன் ஒப்பிடும் போது இம்மாதம் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தாலும், நடைமுறையில் இருக்கும் விலையிலேயே இம்மாதமும் தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வாடிக்கையாளர்கள் 12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரை 3,985 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரை 1,595 ரூபாவிற்கும் தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம் என அந்த நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நவம்பர் மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைககு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,12 கிலோ கிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 3,565 ரூபாவாகும்.

மேலும், 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 1,431 ரூபா அறிவிக்கப்பட்டுள்து.

அத்துடன், 02 கிலோகிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 668 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...