சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நீக்கம்; பல மாவட்டங்களில் நிலை மஞ்சள் எச்சரிக்கைகள் நீடிப்பு!

images 3 4

நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் வழங்கப்பட்டிருந்த நிலை 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organisation – NBRO) தற்போதைய நிலவரம் மற்றும் சமீபத்திய மழையை மதிப்பாய்வு செய்த பின்னர், பல மாவட்டங்களில் நிலை 2 (ஆம்பர்) மற்றும் நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கைகளை நீட்டித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் கங்கை இஹல கோறளை, பூஜாபிட்டிய, உடபளாத்த, குண்டசாலை, கங்காவட கோரளை, தெல்தோட்டை, மெததும்பர, மினிபே, பன்வில, டோலுவ, யட்டிநுவர, ஹரிஸ்பத்துவ, அக்குரணை, பத்ததும்பர, தும்பனை, பஸ்பாகே , ஆகிய பிரதேசங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

பாத்தஹேவஹெட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். குருநாகல் மாவட்டத்தில், ரிதீகம பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் 2 ஆம் நிலை எச்சரிக்கையின் கீழ் நீடிக்கின்றன.

நுவரெலியா மாவட்டத்தில், ஹங்குரகெத்த, வலப்பனை, மதுரட்ட மற்றும் நில்தண்டஹின்ன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் நிலை 2 (ஆம்பர்) எச்சரிக்கையின் கீழ் தொடர்கின்றன. இதற்கிடையில், நிலை 1 (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கை, குடியிருப்பாளர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல், பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் ஊவா பரணகம, பதுளை, ஹாலி எல, மீகஹகிவுல, ஹல்துமுல்ல, கந்தகெட்டிய, பசறை, சொரணதொட்ட, எல்ல, வெலிமடை, லுணுகல, ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு 1 ஆம் நிலை எச்சரிக்கைகள் பொருந்தும். குருநாகல் மாவட்டத்தில், மல்லவப்பிட்டிய, பொல்கஹவெல, மாவத்தகம மற்றும் அலவ்வ பிரதேச செயலகப் பிரிவுகளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் கண்காணிப்பில் உள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் நாவுல, பல்லேபொல, அம்பங்கங்க கோரளை, யடவத்த, வில்கமுவ, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்ட மற்றும் மாத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் முதலாம் நிலை எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில், கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ கோரளை, நோர்வூட், தலவாக்கலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களும் மட்டம் 1 (மஞ்சள்) எச்சரிக்கையின் கீழ் உள்ளன

Exit mobile version