tamilnaadif 2 scaled
இலங்கைசெய்திகள்

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Share

சில மாவட்டங்களின் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

அதன்படி குறித்த எச்சரிக்கை இன்று (30.12.2023) பிற்பகல் 2:30 முதல் நாளை பிற்பகல் 2.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பதுளை மாவட்டத்தின் சொரணதொட்டை மற்றும் பசறை பிரதேசங்கள், கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேசம், மொனராகலை மாவட்டத்தில் மெதகம பிரதேசம், நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த மற்றும் வலப்பனை பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலிஎல மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல, பல்லேகம, ரத்தோட்டை, நாவுல ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...