f 3 scaled
இலங்கைசெய்திகள்

பதுளையில் மண்சரிவு அபாயம்: 201 பேர் வெளியேற்றம்

Share

பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பசறை, கனவரல்ல மவுஸ்ஸாகலை, மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 67 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் அந்தப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரி சஞ்சீவ சமரகோன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி பசறை, கனவரல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 குடும்பங்கள் (50 பேர்) கனவரல்ல இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 49 குடும்பங்கள் (151 பேர்) கல்லுல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குடும்பங்களுக்கான உணவு, மருத்துவ வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு லுணுகலை மற்றும் பசறை பிரதேச செயலக செயலாளர்களின் ஆலோசனையுடன் கிராம சேவகர் மற்றும் அனர்த்த நிவாரண சேவை அதிகாரி ஆகியோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மண்சரிவு அபாயம் காரணமாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்புக்குப் பொலிஸாரைக் கடமையில் ஈடுபடுத்த சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...