19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

Share

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற சபை விவாதத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் நீதி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடுவதை போன்று இந்த விடயத்துக்கு தீர்வுக் காண நடவடிக்கை எடுத்தால் அது மத மோதல்களையே ஏற்படுத்தும்.

யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்குரிய சிறந்த தீர்வு ஓரிரு வாரங்களில் முன்வைக்கப்படும். எமக்கு எதிராக பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுத்து வருகிறோம்.

சுவிட்ஸர்லாந்தின் பெடரல் பற்றி பேசிப் பயனில்லை. சகல பிரச்சினைகளுக்கும் இங்கிருந்தவாறு தான் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும். அதனை மறந்து விடக்கூடாது என்றார்.-

Share
தொடர்புடையது
நவாலி திருவிழா
இலங்கை

நவாலி திருவிழாவிலும் அசம்பாவிதம் – பொதுமக்கள் பலரும் பாதிப்பு!

நேற்று இரவு, நவாலி அந்திரான் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் பனை மரம் ஒன்றும்...

dengue original 1
இலங்கை

எழுபதை கடந்தது டெங்கு மரணங்கள்!

2026 இன் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 93,381 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சுற்றிவளைப்புக்கள்
இலங்கை

அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்கள் – 751 சந்தேக நபர்கள் கைது!

முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது...

சீன மின் விளக்குகள் பறிமுத
இலங்கை

ஆலய திருவிழாவில் ஏற்பட்ட அசம்பாவிதம் – நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம்...