25 683ad28c1544b
இலங்கைசெய்திகள்

இதைச் செய்தால் மக்கள் எம்மையும் விரட்டியடிப்பார்கள் – அமைச்சர் லால்காந்த

Share

பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாவிட்டால் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதுடன் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு பதவியை விட்டு விலக நேரிட்டது என லால்காந்த தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் கொடுக்க எவரும் முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நாமும் வீட்டுக்கு செல்ல நேரிடும் எனவும் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
செய்திகள்உலகம்

கேமரா வேண்டாமே! உங்களைப் போன்றே பேசும் AI உருவம்: யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்!

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது...

MediaFile 8 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் 3.5°C ஆகக் குறைந்த வெப்பநிலை! நாடு முழுவதும் பரவிய கடும் குளிர்!

இலங்கையின் வெப்பநிலை வியாழக்கிழமை (22) அன்று கடுமையாகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. நுவரெலியாவில்...

gold chain jewellery
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாடிக்கையாளர் போல் வந்து கைவரிசை: ஹட்டனில் பட்டப்பகலில் தங்கச் சங்கிலி திருட்டு!

ஹட்டன் நகரின் மத்தியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த நபர் ஒருவர்...

lhklmf nifkmjbd mgn mj gdihnmg uinbgf bg i
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் மொட்டுடன் இணைந்த ரமேஷ் பத்திரன! பெந்தர-எல்பிட்டிய அமைப்பாளராக நியமனம்!

முன்னாள் அமைச்சரும் காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் பத்திரன, மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன...