19 12
இலங்கைசெய்திகள்

மீண்டும் தவணையிடப்பட்டுள்ள குருந்தூர் மலை வழக்கு

Share

மீண்டும் தவணையிடப்பட்டுள்ள குருந்தூர் மலை வழக்கு

முல்லைத்தீவு (Mullaitivu) – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.

B1053/2022 என்ற இலக்கமுடைய குறித்த வழக்கு நேற்றையதினம் (25) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ( T. Raviharan) மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் (Rattinarasa Mayuran), கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் (Chinnarasa Lokeswaran) ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை விவாதங்கள் நடைபெற்று எதிர்வரும் வருடம் (2025) ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்கு மீண்டும் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் குறித்த வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு காவல்நிலையத்திற்கு , வருமாறு காவல்துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்போது காவல்நிலையம் சென்றவர்களை அங்கு வைத்து கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...