19 23
இலங்கைசெய்திகள்

இருவர் நாட்டை விட்டு தப்பியோட்டம்

Share

பாதாள உலகக்குழுக்களின் இரண்டு முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல போதைப் பொருள் வர்த்தகரான குடு சலிந்து மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் பொடி லெசி ஆகியோர் இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இருவரும் அண்மையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருவரும் கடல் மார்க்கமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குடு சலிந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டுமென பாணந்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் குறித்த பிணை நிபந்தனையை குடு சலிந்து நிறைவேற்றத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் குடு சலிந்துவின் இல்லத்தில் பாரிய விருந்துபசாரம் நடத்தப்பட்டதாகவும் இதில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொடி லெசி என்ற பாதாள உலகக் குழு தலைவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
1761139778 Piumi Hansamali Sri Lanka Ada Derana 6
செய்திகள்இலங்கை

“பத்மே எனது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத்தான் சொன்னேன்”: பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு பியூமி ஹன்சமாலி விளக்கம்!

பாதாள உலகக் குழுக்களின் தலைவராகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக...

23 64056e32f0004
செய்திகள்இலங்கை

வாயால் மின் இணைப்பு கொடுக்க முயன்ற மாற்றுத்திறனாளி: யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் நேற்று...

tamil nadu 2024 12 f67e33ad500da080df9856738ff5cc56 16x9 1
செய்திகள்இலங்கை

தாழமுக்கம் உருவாகும் அபாயம்: வட தமிழகத்தை நோக்கி நகரும் குறைந்த அழுத்தப் பிரதேசம்

இலங்கையின் வடக்குக் கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், அடுத்த 12...

mlam hizbullah
செய்திகள்இலங்கை

மண்முனைப்பற்று முஸ்லிம் மக்களின் காணி உறுதிப் பிரச்சினை: நீதித்துறை விசாரணைக்கு பிரதி அமைச்சர் உத்தரவாதம்!

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத்...