கொத்மலையில் உள்ள கரண்டியெல்ல பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 01 மில்லியன் நிதி வழங்கப்படும் என்றும், அந்த நிதி அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனகொடுவ, பண்டுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வனத்தவில்லுவ, சிலாபம், புத்தள, தனமல்வில, வெல்லவாய, கந்தளாய், றம்பேவவ ஆகிய பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொத்மலை, ,இறம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து கம்பளை ஆதார மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் இன்று(14) காலை உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.