கொலைக் கலாசாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள்! அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை

7 45

கொலைக் கலாசாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள்! அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை

நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் மக்களினது உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (22) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,நாட்டில் தற்போது கொலைச் சம்பவங்கள் இடம்பெறுவதால் சமூகத்தில் அனைவரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

பிள்ளைகள் மற்றும் ஒட்டு மொத்த சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான வேலைத்திட்டத்தை முன்வையுங்கள்.

நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் பாதுகாப்பு கூட பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version