4 52
இலங்கைசெய்திகள்

மிலேச்சத்தனமான தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் – காவல்துறையின் அசமந்தம்

Share

மிலேச்சத்தனமான தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் – காவல்துறையின் அசமந்தம்

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி (Kilinochchi) மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரைக் கடத்த முயன்றனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரைப் காவல்துறையினர் இன்னமும் கைதுசெய்யவில்லை.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகையா தமிழ்ச்செல்வன் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை தனது கடமையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கறுப்பு நிற வாகனத்தில் வந்த இருவர் அவரைக் கடத்திச் செல்ல முற்பட்டதுடன் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் விவரங்கள் காவல்துறையினரிடம் இருப்பதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் (District General Hospital, Kilinochchi) அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தம்மைக் கடத்த வந்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர் கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் என நேற்றுமுன்தினம் மாலை அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததாக, தாக்குதலுக்குள்ளான கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு நேற்றுமுன்தினம் காலை வந்த மேற்படி நபர் தன்னையும், அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரையும் திட்டியதாக முருகையா தமிழ்ச்செல்வன் சக ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

சக ஊடகவியலாளரை கடத்த முயன்ற இருவரையும் நேற்று மாலைக்குப் பின்னரும் காவல்துறையினர் கைது செய்யத் தவறியுள்ளனர் என்று பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல தமிழ் ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளர்களாகப் பணிபுரியும் முருகையா தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத போதைப்பொருள், மண், மணல் கடத்தல் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார்.

மேலும் முருகையா தமிழ்ச்செல்வன் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...