tamilni 304 scaled
இலங்கைசெய்திகள்

6 வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Share

6 வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு

கிளிநொச்சி போராலை என்ற இடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 143 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி பேராலை என்ற இடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 143 கிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு நேற்றைய (18.01.2024) தினம் குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது நேற்றைய தினம்(18) தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரண்டாது நபர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலாவது நபர் சார்பாக சட்டத்தரணி சிறிகாந்தா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையில் அரச சட்ட வாதி என் என். அர்ஜுனகுமார் முன்னிலையாகியிருந்தனர்.

எதிர்தரப்பு சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குறித்த எதிர்தரப்பு நபர் இதற்கு முன்னர் குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றுள்ளவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையாகவும் காணப்படுகின்றார் எனவும் தண்டனை குறைப்பு விண்ணப்பத்தை செய்து இருந்தார்.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக் களத்தின் சார்பாக முன்னிலையான சட்ட வாதி தண்டனையானது ஒரு முன்னோடியான தண்டனையாக இருக்க வேண்டும் குற்றவாளிக்கான தண்டனையானது ஒரு தனிநபருக்கான தண்டனையாக கருதவது அல்லாது ஒரு எதிர்கால இளம் சமூகத்தை பாதுகாக்கின்ற ஒரு விடயமாக கருதி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை செவிமடுத்த நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...