அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் இருந்தவேளை திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குகளுடன் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றதாக நிட்டம்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
கஹட்டோவிட்ட, குருவலன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபர் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
போதைப்பொருள் குற்றத்திற்காக அத்தனகல்ல நீதவான் நீதிமன்ற அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், வழக்கு விசாரணையின் போது திடீரென சுகவீனமடைந்ததையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வட்டுப்பிடிவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணைபின்னர், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது, கைவிலங்குகளுடன் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்து சந்தேக நபர் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரைக் கைது செய்ய நிட்டம்புவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

