6 16
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய தம்முடன் சிறையில் வைத்திருந்த அங்கீகரிக்கப்படாத பொருட்கள்

Share

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் இருந்து பல அங்கீகரிக்கப்படாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில், 2025 மே 7 ஆம் திகதியன்று ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு, மே 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சிறைச்சாலையில் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களில் யானை முத்து, பல மரப்பட்டை துண்டுகள் மற்றும் ஒரு சிறிய பொறிக்கப்பட்ட புத்தர் சிலை ஆகியவை அடங்கியுள்ளன.

விசாரணையின்போது, இந்த பொருட்கள் தனது தந்தையால் தனக்கு வழங்கப்பட்டதாகவும், தனது பாதுகாப்புக்காக அவற்றை சிறைக்கும் எடுத்து வந்ததாக ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

எனினும்,இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...

9 15
உலகம்செய்திகள்

கனடா பிரம்டனில் திறந்துவைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுத்தூபி

கனடா பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி இன்று(11) திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசாங்கத்தால்...

8 15
உலகம்செய்திகள்

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி! புலம்பெயர் கனேடிய அமைச்சர் உருக்கம்

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமை எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும்...

7 15
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய றம்பொடை விபத்து! ஜனாதிபதி அநுரவின் செய்தி

நுவரெலியா – றம்பொடை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...