கரவெட்டிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில், நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வில், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலியான மில்லரின் தாயார் கலந்துகொண்டு ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் பங்கேற்ற ஏனையோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் முகமாக இந்தப் பிரத்தியேகமான நிகழ்வு கரவெட்டிப் பிரதேச சபையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

