1 28
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு சேவை செய்யாதவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியதில்லை: பாரத் அருள்சாமி

Share

மக்களுக்கு சேவை செய்யாதவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியதில்லை: பாரத் அருள்சாமி

கண்டி மாவட்டத்துக்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியம் என்பதற்காக மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளவர்களை, மக்களுக்கு சேவை செய்யாதவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியதில்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பாரத் அருள்சாமி (Bharath arulsamy) தெரிவித்துள்ளார்.

மேலும், எம்மைபோன்ற இளைஞர்களை, மக்கள் பக்கம் நிற்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பும் முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பாரத் அருள்சாமியின் கண்டி மாவட்ட தேர்தல் காரியாலய திறப்பு விழா கண்டி நகரில் இன்று (18.10.2024) இடம் பெற்றுள்ளது.

அதன் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ நீண்டகாலமாக கண்டியில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. அதனை வென்றெடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் 2010 ஆம் ஆண்டு விதை விதைத்தார்.

அந்த விதைமூலம் ஏற்பட்ட விளைச்சலைதான் சிலர் 2015 ஆம் ஆண்டு அறுவடை செய்தனர்.

எனினும், கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாக மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடக்கவில்லை. மாறாக ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டனர்.

சலுகைகளுக்காக மக்கள் ஆணையை பணயம் வைத்து சிலர் வியாபாரம் நடத்தினர். இதனால் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே, மனோ கணேசனின் வழிகாட்டலுடன் கண்டியில் களமிறங்கியுள்ள எனக்கு தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள். முஸ்லிம் சொந்தங்களும் சமூக நன்மைக்காக ஒரு வாக்கை பயன்படுத்துவார்கள். அந்தவகையில் கண்டி மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இம்முறை நிச்சயம் பாதுகாக்கப்படும்.

ஆனால் புதிய இளைஞனை, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய என்னை மக்கள் அதி உயர் சபைக்கு, அமோக ஆதரவுடன் அனுப்பி வைப்பார்கள்.” – என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...