tamilnaadi 44 scaled
இலங்கைசெய்திகள்

துண்டாக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தி கண்டி வைத்தியசாலை சாதனை

Share

துண்டாக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தி கண்டி வைத்தியசாலை சாதனை

இயந்திரத்தில் சிக்கிய பெண்ணொருவரின் கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தி கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

தென்னை அரைக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, ​​திடீரென வேலை செய்ய ஆரம்பித்ததால், வலது கையில் முழங்கைக்கு மேல் உள்ள பகுதி, இயந்திரத்தில் சிக்கி இரண்டாக வெட்டுப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய பெண்ணே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் கை வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் அமில சசங்க ரத்னாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் வைத்தியர் உதய கிரிடேன, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சமிலா ஜயரத்ன, வைத்தியர் சதீர பிரேமரத்ன, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், சிரேஷ்ட பதிவாளர் உதர ரத்நாயக்க, மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் உடுவெல, வைத்தியர் கசுன் மற்றும் சேனக ஆகியோர் இந்த சத்திரசிகிச்சையிளை மேற்கொண்டுள்ளனர்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் ஷ்யாமா நாணயக்கார, சிதாரா சுரவீர, சந்திமா சேனவிரத்ன, திலினி அபேவர்தன, எரண்டி மதுஷானி மற்றும் சசானி கோஸ்டா உள்ளிட்ட தாதியர் குழுவும் இந்த அறுவை சிகிச்சைக்கு ஆதரவளித்துள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...