35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழப்பு – மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தகவல்!

25 69361c3bb973c

கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்கள் காரணமாக 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகூன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (டிசம்பர் 7) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாத்தளை மாவட்டத்தில் 8,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.நேற்று (07) நிலவரப்படி, 25 மாவட்டங்களையும் பாதித்த மோசமான வானிலை காரணமாக 627 பேர் உயிரிழந்ததாகவும், 190 பேர் காணாமல் போனதாகவும் பேரிடர் மேலாண்மை மையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் (232) பதிவாகியுள்ளன.
நுவரெலியா (89), பதுளை (90), குருநாகல் (61), கேகாலை (32), புத்தளம் (35) மற்றும் மாத்தளை (28) ஆகிய இடங்களில் மரணங்களின் எண்ணிக்கை கவலைக்குறிய வகையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 பேர் பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் காரணமாக 4,517 வீடுகள் முழுமையாகவும், 76,066 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Exit mobile version