எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர்உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும்.
விலை அதிகரிக்காமல் இருப்பதனால் ஒரு லீட்டர் டீசல் விற்பனையின்போது 50 ரூபா நட்டத்தையும் ஒரு லீட்டர் பெற்றோல் விற்பனையின் போது 16 ரூபா நட்டத்தையும் கூட்டுத்தாபனம் எதிர்கொள்கிறது.
இவ்வாறான பின்னணியில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கடந்த 7ஆம் திகதி நிதியமைச்சிடமும் வலுசக்தி அமைச்சிடமும் வலியுறுத்தினார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment