tamilni 95 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான தலைவர்: கமால் குணரத்ன பதிலடி

Share

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான தலைவர்: கமால் குணரத்ன பதிலடி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற போதும், அவர் ஒரு நேர்மையான தலைவர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உரை அடங்கியதாக கூறப்படும் காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்த காணொளி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராகத் தமிழர்கள் தரப்பில் இனி எவருமே வர முடியாது.

இந்த வீடியோ புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழுவால் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை.

அந்தப் போலி வீடியோவுக்கும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கும் என்று என்னால் கூற முடியாது. அதேவேளை, தொடர்பு இல்லை என்றும் என்னால் கூற முடியாது.

ஆனால், இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளது என்பது நூறு வீதம் உண்மை.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர்.

அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்ய முடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல். பிரபாகரனின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவர் நேர்மையான ஒரு தலைவர். இறுதி வரைப் போராடிய ஒரு தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...