தடியடி பிரயோகம் மேற்கொள்ளவுள்ள ஜே.வி.பி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் எவரேனும் மக்களின் சொத்துக்களை அபகரிக்க வந்தால் தடியடி எடுத்து அடிப்போம் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.
தனது ஆட்சேபனை சொத்து மற்றும் சொத்து வைத்திருப்பவர்களுக்கு எதிரானது அல்ல என்றும், பொதுமக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்தவர்களுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த குழுவில் அரசியல்வாதிகள் மற்றும் சில தொழிலதிபர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். அவ்வாறு இல்லாமல் பொது மக்களின் சொத்துக்களை அபகரிக்க வாய்ப்பில்லை எனவும் அபகரிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி வங்கி மற்றும் நிதி மன்றத்தின் கொழும்பு மாவட்ட மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.