11 8
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியினர் மீண்டும் கலவர காலப்பகுதியை உருவாக்க முயற்சி : மனுஷ தெரிவிப்பு

Share

ஜே.வி.பியினர் மீண்டும் கலவர காலப்பகுதியை உருவாக்க முயற்சி : மனுஷ தெரிவிப்பு

இசைக்குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் 1988-1989 போன்றதொரு சூழலை மீண்டும் உருவாக்க ஜே.வி.பி முயற்சிப்பதாக ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பிலான ஆலோசகர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று (08.09.2024) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் நேற்று காலியில் பிரசாரம் செய்தோம். பதினான்காயிரம் இடங்களில் ஜனாதிபதிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது.

காலியில் வீடு வீடாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் செய்ய கெஸ்பேவ டிப்போவில் இருபத்தைந்து பேருந்துகள் முன்பதிவு செய்து அதில் பொது மக்களை ஜே.வி.பியினர் அழைத்து வந்துளளனர்.

ஜே.வி.பியின் தேர்தல் பிரசார கூட்டங்கள் என்று கூறிக்கொண்டு நாடு முழுவதிலும் உள்ள மக்களை அழைத்து வந்து காலியில் பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறுதான் அவர்களால் போலி மக்கள் அலை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே காலியில் இருப்பவர்கள் யாரும் முட்டாள்கள் இல்லை நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதனை ஊடகங்கள் ஆராய்ந்து பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டும்.

பிரபல இசைக்குழுவான மரியன்ஸ் இசைக்குழுவின் ரோசாலா ஒரு பாடலை மாற்றி பாடியுள்ளார். இதனால் அந்த இசைக்குழுவுக்கு மன்னிப்பு கேட்கும்படி அசச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு உண்மையைக் கூற வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. வடக்கிற்குச் சென்று தென்னிலங்கை மக்கள் தேர்தலில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளதாகவும் அதனை வடக்கில் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

வடக்கு மக்கள் மாத்திரம் அந்த தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் போது தென்பகுதி மக்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது தமக்கு தெரியாது எனவும் அச்சுறுத்துகின்றார்.

ஜே.வி.பி பேரணிக்கு சென்ற இராணுவ அதிகாரியை அச்சுறுத்தும் வீடியோக்களை பார்த்திருக்கிறோம். இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்து மீண்டும் 88-89 போன்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

அதன் மூலம் ஒரு பேரழிவை உருவாக்க பார்க்கின்றார்கள். இதை நாட்டு மக்கள் சிந்தனை செய்ய வேண்டும். இதுபோன்ற விடயங்களில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...