அநுரகுமாரவுக்கு பயங்கரமான கடந்த காலம் – ஹிருணிகா அதிரடி தகவல்

tamilni 42

அநுரகுமாரவுக்கு பயங்கரமான கடந்த காலம் – ஹிருணிகா அதிரடி தகவல்

அநுரகுமார திசாநாயக்கவுக்கு பயங்கரமான கடந்த காலம் உள்ளதால் அவருக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தகுதி இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

எனவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற மத்திய சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டி உள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஒரு பயங்கரமான கடந்த காலம் உண்டு. ஹரிணிக்கு அப்படியில்லை.

அவருக்கு நல்ல அரசியல் வாழ்க்கை இருக்கிறது. அவரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

Exit mobile version