4 16
இலங்கைசெய்திகள்

யாழில் மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் திடீர் மரணம்

Share

யாழில் மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் திடீர் மரணம்

தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம்(Bharati Rajanayagam) யாழ்ப்பாணத்தில் காலமானார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று(09.02.2025) தனது 62 ஆவது வயதில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் அவரது வீட்டில் காலமானார்.

அத்துடன், சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரான இவர் சுமார் 40 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடகத்துறை அனுபவத்தை கொண்டவராவார்.

தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த பாரதி இராஜநாயகம் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டதோடு அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ். காரியாலய பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...