13 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான்

Share

இலங்கையில், ஜப்பான் நிறுவனங்கள், ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜப்பான் தூதர் அகியோ இசோமாட்டா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்த விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தூதர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

முன்னதாக, சில ஜப்பானிய நிறுவனங்கள், இலங்கையில் முதலீடுகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக செய்திகள் வந்தன.

ஜப்பானிய நிறுவனங்கள் இணக்கக் கடமைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கின்றன. அவை ஒருபோதும் இலஞ்சம் அல்லது கையூட்டுகளை வழங்குவதில்லை.

எனவே, இந்த விடயத்தில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை செயற்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஜப்பானிய தூதர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் உள்ள அரசியல்வாதிகள் எந்த வகையான ஊழலிலும் ஈடுபடவில்லை என்ற ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளித்த அவர், அரச அதிகாரிகள் மட்டத்திலும் அதே பிரச்சினையை நிவர்த்திக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...