ஜெயிலர் 2 படத்தின் வெறித்தனமான அப்டேட்.. ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளிவரும் மாஸ் வீடியோ

images 2

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் இருக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த ஜெயிலர் படம், தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 படம் குறித்து எப்போது அறிவிப்பு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.

அதன்படி, ஜெயிலர் 2 படத்திற்கான வேலைகளை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வருகிற டிசம்பர் 5ஆம் தேதி ஜெயிலர் 2 படத்திற்கான, ப்ரோமோ வீடியோ ஷூட்டிங் நடக்கவிருக்கிறதாம்.

இதற்கான செட் ஒர்க் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு, நெல்சன் திலீப்குமாரின் ஸ்டைலில் ப்ரோமோ வீடியோவுடன் வெளிவரும் என கூறப்படுகிறது

Exit mobile version