tamilni 220 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு விளக்கமறியல்

Share

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு விளக்கமறியல்

போதைப் பொருளுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மாணவனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(12) யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ கூட பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நடமாடுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு மாணவனை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது நீதவான் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவன் ஏற்கனவே திருநெல்வேலிப் பகுதியில் முன்னரே போதைப்பொருள் பயன்படுத்தியதாக கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...