யாழ். பல்கலைக்கழக மாணவன் விபத்தில் உயிரிழப்பு

tamilni 448

யாழ். பல்கலைக்கழக மாணவன் விபத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (21.2.2024) யாழ். நீா்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் – வேம்படி பகுதியை சோ்ந்த யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிாிவில் கல்வி பயிலும் 22 வயதுடைய ரமேஷ் சகீந்தன் என்ற மாணவனே விபத்தில் உயிாிழந்துள்ளாா்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது வீட்டிலிருந்து இன்று (21) அதிகாலை நீா்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் பயணித்த போது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

Exit mobile version