6 54
இலங்கைசெய்திகள்

போதை ஒழிப்பு விவகாரம் : யாழ் பல்கலை கலைப்பீடத்தின் பின்னால் தமிழ் மக்களை அணிதிரள அழைப்பு

Share

போதை ஒழிப்பு விவகாரத்தில் பதவியை துச்சமென துறந்த கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினதும்(raguram) போராட முன்வந்துள்ள கலைப்பீட ஒன்றியத்தின் பின்னாலும் ஓட்டுமொத்த தமிழ் சமூகமும் அணிதிரள வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று தமிழர் தாய்நிலத்தில், யாழ் பல்கலைக்கழக(university of jaffna) சமூகத்தில் தோன்றியுள்ள மிகப்பாரதூரமான விவகாரம் தொடர்பாக அனைத்து தமிழ் அமைப்புக்களும் தலைவர்களும் கற்றறிந்த சமூகமும் ஆழமாக கரிசனை கொள்ள வேண்டும்.

யுத்தம் தின்ற தாய்மண்ணை போதை, மது, கலாச்சார சீரழிவு எனும் அரக்கர்கள் கபளீகரம் செய்வதை எதுவரை எமது சமூகம் பொறுமையாக கையாளப்போகின்றது? வெளிப்படையாகவே போதை சார் ஒழுக்க விழுமியங்களிற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு, அதில் எந்த விட்டுகொடுப்பும் இல்லாமல் இருந்தமைக்காக ஒரு பீடாதிபதி மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை பாரதூரமான, எமது சமூகத்தின் ஒழுக்க நெறியை கேள்விக்குறியாக்கும், நன்னடத்தைசார் விழுமியங்களிற்கு தமிழ் சமூகத்தின் அறிவுப்புலத்தில் விடுக்கப்பட்ட பாரிய சவாலாகும்.

கடந்த 15ஆண்டுகளில் போதையின் பிடியில் சிக்கி தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறை, குறிப்பாக மாணவ சமூகம் படும் அவலம் வார்த்தையால் வர்ணிக்கமுடியாது. பல பெற்றோர் நடைபிணங்களாக வாழ்கின்றனர். தினம் தினம் விபத்துக்களும் தற்கொலைகளும் இளவயது நெறிபிறழ்வுகளும் கல்வியிலிருந்து இடைவிலகல்களும் எம் தாய்மண்ணில் போதை எனும் அரக்கனால் மலிந்துவிட்ட நிலை கண்டு சமூக, தமிழ் தேசிய ஆதரவாளர்கள் மனதினுள் அழுத வண்ணமே உள்ளனர்.

இந்த நிலையில் போதைக்கெதிராக பல்கலைக்கழகத்தில் பலமான குரல்கள் எழுந்திருப்பது கற்றறிந்த தமிழ் தேசியத்திலும் சமூகசிந்தையிலும் ஆழமாக ஊறிய சமூகத்தின் மாற்றத்திற்கான திறவுகோலான ஊடகபின்புலத்திலிருந்து வந்த பேராசிரியர் ஒருவரின் செயலினூடாக வெளிப்பட்டு இருப்பது அவருக்கு பின்னால் யாழ் பல்கலையின் மிகப்பெரும் மாணவ சக்தியான கலைப்பீட மாணவர் ஓன்றியம் போராட்டத்தை ஆரம்பித்திருப்பது தமிழ் சமூகத்திற்கு ஆறுதல் அளிக்கும் நல் அறிகுறியாகும்.

மாற்றத்தை, தூய்மையாக்கலை பற்றி பேசுகின்ற இந்த தருணத்தில் தமிழ் சமூகம் தன்னை பீடித்துள்ள பீடைகளை களைந்து, புதிய போதையற்ற தேசம் நோக்கிய பாதையை ஆரம்பிக்கட்டும். அதற்கு அனைவரும் ஒன்றாக கரங்களை கலைப்பீடத்துடன் இணைத்திடுவோம். நல்ல சிந்தனையுள்ள அனைவரும் தமிழ் தேசிய ஆன்மாவை தேசத்தினை இருப்பை பாதுகாக்க அணி திரண்டு ஆதரவை வெளிப்படுத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...