19 3
இலங்கைசெய்திகள்

போக்குவரத்து தடை – நெடுந்தீவை பத்திரமாக சென்றடைந்த பயணிகள்

Share

போக்குவரத்து தடை – நெடுந்தீவை பத்திரமாக சென்றடைந்த பயணிகள்

யாழ். (Jaffna) நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து நேற்று தடைப்பட்டிருந்த நிலையில் குறிகாட்டுவானில் இருந்து பயணிகள் குமுதினிப்படகு மூலம் இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்தனர்.

நேற்று (02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து புறப்பட தயாரான வடதாரகை படகு இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

திருத்த வேலையினை முடித்து பயணத்தை தொடராலாம் என தெரிவித்திருந்த நிலையில் உடனடியாக மாற்று படகு சேவையும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், திருத்த வேலை செய்வது பயனளிக்காத நிலையில் வடதாரகை சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்தை தொடர்ந்து நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்துள்ளது.

மாலை முதல் துறைமுகப் பகுதியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் , நோயாளர்கள் என சுமார் 60 பேர் வரையில் காத்திருந்து பயணத்தினை தொடர்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share
தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...