யாழ்.சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்களின் மோசமான நிலை

tamilni 53

யாழ்.சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்களின் மோசமான நிலை

யாழ்.சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மோசமாக பாதிப்படைந்துள்ள பாலங்களை சீரமைப்பதற்கு பெரும் நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் பல பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை புனரமைப்பு செய்வதற்கான நிதி கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது மிகவும் சேதமடைந்ததாக இனங்காணப்பட்டுள்ள பாலங்களில் சில தற்காலிக திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் பற்றாக்குறையான வருமானத்திலேயே இவற்றிக்கு நிதி ஒதுக்கவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version