பலாலி விமான நிலையத்தில் எடுக்கப்படவுள்ள மாற்றங்கள்!

maxresdefault

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையைப் புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானச் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

Exit mobile version