யாழில் பணத்திற்காக முதியவரை கடத்திய பெண்

யாழில் பணத்திற்காக முதியவரை கடத்திய பெண்

யாழில் பணத்திற்காக முதியவரை கடத்திய பெண்

யாழில் பணத்திற்காக முதியவரை கடத்திய பெண்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில், பணத்திற்காக முதியவர் ஒருவரை கடத்திய பெண்ணை தேடி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான காணியை அப்பகுதியை சேர்ந்த பிரிதொரு பெண்ணுக்கு விற்பனை செய்வதற்காக முன்பணமாக 15 இலட்சம் ரூபாவினை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் குறித்த முதியவர் நீண்டகாலமாக காணியை விற்பனை செய்யவில்லை என்பதோடு பணத்தை மீளக்கொடுப்பதற்கும் தாமதப்போக்கினை கடைபிடித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்தப் பெண், ஆண்கள் நால்வரின் உதவியுடன் முதியவரை கடத்தி அச்சுறுத்தியதோடு தாக்கியும் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து முதியவர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட ஐவரும் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version