1 25
இலங்கைசெய்திகள்

தொடர்ந்து தவறிழைக்கும் யாழ். மாநகர சபை: மக்கள் கடும் அதிருப்தி

Share

யாழ்ப்பாணம் மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறு விதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளிவந்தபோதும் அவற்றை சீர்செய்யாது அதே தவறுகளை தொடர்ந்து இழைத்த வண்ணம் உள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீதியில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்லுதல், கல்லூண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்தல், மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் உரிய முறைப்படி செயற்படாமை உள்ளிட்ட மேலும் பல முறைகேடான செயற்பாடுகள் குறித்தான குற்றச்சாட்டுகள் மாநகர சபை மீது முன்வைக்கப்படுகிறது.

இன்றையதினமும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரித்த கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது உரிய முறையை பின்பற்றாமையை அவதானிக்க முடிந்தது.

அதாவது உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் கழிவுப் பொருட்களை ஏற்றிய பின்னர் அதனை மூடாமல் திறந்த வண்ணம், கழிவுப் பொருட்கள் சேமிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்தது.

இதன்போது பொலுத்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் காற்றில் பறந்து வீதிகளில் பரவுவதை அவதானிக்க முடிந்தது. அந்த உழவு இயந்திரத்துக்கு இலக்க தகடும் காணப்படவில்லை.மாநகர சபையின் கழிவக்கற்றும் பல வாகனங்களானது இவ்வாறு இலக்க தகடு இல்லாமலே பணியில் ஈடுபடுகின்றது.

யாழ். மாநகர சபையினரே இவ்வாறு தொடர்ச்சியாக தவறிழைக்கும்போது அவர்கள் எவ்வாறு மக்களை நல்வழிப்படுத்த தகுதியுடையவர்கள் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாநகரசபை ஆணையாளரான ச.கிருஷ்ணேந்திரன் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே இவ்வாறான முறைகேடுகளை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Share
தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...