1 25
இலங்கைசெய்திகள்

தொடர்ந்து தவறிழைக்கும் யாழ். மாநகர சபை: மக்கள் கடும் அதிருப்தி

Share

யாழ்ப்பாணம் மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறு விதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளிவந்தபோதும் அவற்றை சீர்செய்யாது அதே தவறுகளை தொடர்ந்து இழைத்த வண்ணம் உள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீதியில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்லுதல், கல்லூண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்தல், மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் உரிய முறைப்படி செயற்படாமை உள்ளிட்ட மேலும் பல முறைகேடான செயற்பாடுகள் குறித்தான குற்றச்சாட்டுகள் மாநகர சபை மீது முன்வைக்கப்படுகிறது.

இன்றையதினமும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரித்த கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது உரிய முறையை பின்பற்றாமையை அவதானிக்க முடிந்தது.

அதாவது உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் கழிவுப் பொருட்களை ஏற்றிய பின்னர் அதனை மூடாமல் திறந்த வண்ணம், கழிவுப் பொருட்கள் சேமிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்தது.

இதன்போது பொலுத்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் காற்றில் பறந்து வீதிகளில் பரவுவதை அவதானிக்க முடிந்தது. அந்த உழவு இயந்திரத்துக்கு இலக்க தகடும் காணப்படவில்லை.மாநகர சபையின் கழிவக்கற்றும் பல வாகனங்களானது இவ்வாறு இலக்க தகடு இல்லாமலே பணியில் ஈடுபடுகின்றது.

யாழ். மாநகர சபையினரே இவ்வாறு தொடர்ச்சியாக தவறிழைக்கும்போது அவர்கள் எவ்வாறு மக்களை நல்வழிப்படுத்த தகுதியுடையவர்கள் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாநகரசபை ஆணையாளரான ச.கிருஷ்ணேந்திரன் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே இவ்வாறான முறைகேடுகளை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Share
தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...