யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கட்டுநாயக்கவில் கைது
சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை அணிந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் (National Dangerous Drugs Control Board) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 995 கிராம் நிறையுடைய 24 கரட் தங்க நகைகளை குறித்த நபர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.