9 11
இலங்கைசெய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் வரி சலுகை தொடர்பில் வெளியான தகவல்

Share

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் வரி சலுகை தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம்(Jaffna) சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த அனுமதியானது நேற்று (06.01.2025) கூடிய அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2026.01.30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு (இரத்மலான) திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2025.03.27 ஆம் திகதி தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரிக்குரிய சலுகையை முழுமையாக வழங்குவதை 2024.12.29ஆம் திகதி தொடக்கம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையங்களுக்கான சர்வதேச விமான சேவைகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை தனியார்) நிறுவனங்களால் சர்வதேச விமான நிலைய சேவைகளுக்கான ஊக்குவிப்புச் சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...