யாழ்ப்பாண மக்களுக்கு நன்றி தெரிவித்த பாடகர் ஹரிஹரன்

tamilnaadi 80

யாழ்ப்பாண மக்களுக்கு நன்றி தெரிவித்த பாடகர் ஹரிஹரன்

யாழ்ப்பாணத்தில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலையால் நிகழ்வு தடைப்பட்டது.

முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரபல பாடகர் ஹரிஹரன் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், இடைநடுவில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அசம்பாதவிதம் குறித்து பாடகர் ஹரிஹரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“மறக்க முடியாத இசை நிகழ்ச்சிக்கு நன்றி யாழ்ப்பாணம். உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை வெளிப்படுத்தியது. நாங்கள் நல்லிணக்கத்தையும் இணைப்பையும் ஒன்றாக, இணைந்து கொண்டாடினோம்.

இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அபார முயற்சி செய்தவர்களுக்கு சிறப்பு நன்றி. ஒவ்வொரு நொடிக்கும் நன்றியுடையவனாக இருக்கின்றேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version