தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட மாநாடு!

20220625 145107

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்று வருகிறது

இன்று மாலை 2.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மாநாடு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு எனும் தலைப்பில் நடந்த மாநாட்டில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, ஜே.வி.பியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள்
எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version