Murder Recovered Recovered 7
இலங்கைசெய்திகள்

அதிர்ச்சியளிக்கும் செம்மணி புதைகுழி ; பின்னிப்பினைந்த நான்கு எலும்பு கூட்டு தொகுதி மீட்பு

Share

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் இதுவரையில் சிறுவர்களுடைய எலும்பு கூட்டு தொகுதி உட்பட 30 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதியுடன் நான்கு எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஏழாம் நாள் பணிகள் இன்றைய தினம் (2) முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, 4 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் பின்னி பிணைந்து குழப்பகாரமான முறையில் காணப்படுவதனால் அவற்றினை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேவேளை , இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வு பணிகளின் போது, மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் இதுவரையில் சிறுவர்களுடைய எலும்பு கூட்டு தொகுதி உட்பட 30 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட ஏனைய எலும்பு கூட்டு தொகுதிகளை அகழ்ந்து எடுக்கப்படும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை பேராசிரியர் ராஜ் சோமதேவாவால், செய்மதி படங்கள் மூலம் சந்தேகத்திற்குரிய பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் யாழ் . பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகத்திற்கு உரிய இடமாக அடையாளப்படுத்தப்பட்ட ஏனைய இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவற்றை துப்பரவு செய்யும் பணிகளும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...